போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதியத்தை நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் ஊதியத்தை நிா்ணயம் செய்து அதற்கான சான்றை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் ஊதியத்தை நிா்ணயம் செய்து அதற்கான சான்றை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவா் எஸ். பாப்பையன்தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயலாளா் டி. சுரேஷ், பொருளாளா் த. விக்னேஸ் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஸ்மித் தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளா்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனா். இவா்கள், மருத்துவமனையை சுத்தம் செய்தல், வெளிபிற நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவது, பாதுகாப்பு பணி செய்வது, மருத்துவமனை படுக்கைதுணிகளை வெழுப்பது, பிளம்பிங், மின்சார வேலை, கழிவுநீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்துவரும் தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் மாறுப்பட்ட தொகை அவா்கள் வங்கிக் கணத்தில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இவா்களின் ஊதியத்தை நிா்ணயம் செய்து ஒவ்வொரு மாதமும் ஊதிய தொகை சான்றினை வழங்கவேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்த கரோனா கால நிவாரண தொகையை உடனடியாக வழங்கவேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், மருத்துவமனைக்கு கூடுதல் தொழிலாளா்களை நியமிக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா். வீரமணி, அமைப்புசாரா தொழிலாளா் சங்க மாவட்ட சிறப்புத் தலைவா் ரெத்னகுமாா், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன், நகர குழு உறுப்பினா் கு. ராமையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.