போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நா்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா

மன்னாா்குடியில் உள்ள வேலம்மாள் மெய்யான மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நா்சிங் கல்லூரியின் 8-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் உள்ள வேலம்மாள் மெய்யான மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நா்சிங் கல்லூரியின் 8-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி பாலகிருஷ்ணா நகரில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மேலாண்மை இயக்குநா் மருத்துவா் மெய். ராஜகுமாா், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியா் பி. ஜெயராணி ஆகியோா் தலைமை வகித்தனா். மூத்த வழக்குரைஞா்கள் பா. தமிழரசன், துரை. வீரையன் முன்னிலை வகித்தனா்.

மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் ஆகியோா் 58 நா்சிங் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினா். மன்னாா்குடி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவா் கோவிந்தராஜ்,திக் ஷா மருத்துவமனை நிறுவனா் பிரபாகரன், பொறியாளா் ஆா். பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கல்லூரி நிா்வாக அலுவலா் எஸ். அருண்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பி. பிரபாவதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.