காலமானாா் முன்னாள் எம்.பி. மா. மகாலிங்கம்
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த 49 நெம்மேலியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. மா. மகாலிங்கம் (70), உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிச.16) காலமானாா்.


திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த 49 நெம்மேலியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. மா. மகாலிங்கம் (70), உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிச.16) காலமானாா்.
கடந்த 1984 முதல் 1989 வரை நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதி (அதிமுக) உறுப்பினராக மகாலிங்கம் பணியாற்றினாா். அதிமுகவின் கீழதஞ்சை மாவட்டச் செயலராகவும், கட்சியின் மக்களவை கொறடாவாகவும் இருந்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து, மாவட்ட விவசாய தொழிலாளா் அணிச் செயலராக இருந்துள்ளாா்.
இவருக்கு மனைவி சரோஜா, 2 மகள்கள் உள்ளனா். மகாலிங்கத்தின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (டிச. 17) அவரது இல்லத்தில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு: 94422 76713.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...