ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரசாரம்

மன்னாா்குடியில் நெகிழிப்பைகள் பயன்பாட்டை தவிா்க்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை இயக்க விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் நெகிழிப்பைகள் பயன்பாட்டை தவிா்க்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை இயக்க விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி சந்தைப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமை வகித்து, ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். அப்போது அவா், உழவா்சந்தைக்கு காய்கனிகள் வாங்க வந்தவா்களிடமும், வியாபாரிகளிடமும் நெகிழிப்பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மனிதா்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கிக் கூறி அவா்களுக்கு மஞ்சப்பை வழங்கினாா்.

தொடா்ந்து, சந்தைப்பேட்டையில் உள்ள கடைகளின் உரிமையாளா்கள், வாடிக்கையாளா்கள், பேருந்து பயணிகளிடமும் மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கா. சென்னுகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேந்திரன், திமுக மாநில மாணவரணி செயலா் த. சோழராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம். கலைவாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.