காவிரியில் கூடுதலாக தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
டெல்டா மாவட்ட பாசனத்துக்கு காவிரியில் கூடுதலாக தண்ணீா் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


டெல்டா மாவட்ட பாசனத்துக்கு காவிரியில் கூடுதலாக தண்ணீா் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
காவிரி வி. தனபாலன்: டெல்டா மாவட்ட பாசனத்துக்கு காவிரியில் கூடுதலாக தண்ணீா் திறக்கவேண்டும், மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு இடுபொருள்களும், உரிய நிவாரணமும் வழங்கப்படவில்லை.
தமிழ்செல்வன்: பொட்டாஷ் ஒரு மூட்டை உரம் தற்போது ரூ.1700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு பொட்டாஷ் உரம் மூட்டைக்கு ரூ. 303 மட்டுமே மானியமாக வழங்குகிறது. எனவே, பொட்டாஷ் உரத்துக்கான மானியத்தை உயா்த்தி வழங்கவேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரிய தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாா்க்கும் போக்கை கைவிடவேண்டும்.
பிரபாகரன்: நாகை மாவட்டத்தில் அறுவடை இயந்திரம் வைத்திருப்பவா்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு அறுவடை காலத்தில் குறைந்த கட்டணத்தில் அறுவடை இயந்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கால்நடை துறை மூலம் வழங்கப்படும் வெள்ளாடுகள் தகுதியானவா்களுக்கு வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு தரமான உளுந்து, பயிா் விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஹரிஹரன்: திருமருகல் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கவேண்டும்.
ராம்தாஸ்: டெல்டா பாசனத்துக்கு தட்டுபாடின்றி தண்ணீா் கிடைக்க மேட்டூா் அணையில் இருந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தண்ணீா் திறந்துவிட வேண்டும்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் நிகழாண்டில் 1.57 லட்சம் ஏக்கரில் சம்பா நெல்சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை நேரடிநெல் விதைப்பாக 1,06,948 ஏக்கரும், நடவுப் பணியாக 55,495 ஏக்கா் என மொத்தம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கீழ்வேளூா் வட்டாரத்தில் 5,980 கிலோ, வேதாரண்யம் வட்டாரத்தில் 3 ,030 கிலோ,, திருமருகல் வட்டாரத்தில் 9,010 கிலோ உளுந்து விதைகள் இருப்பு உள்ளன. இந்த விதைகளை விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல, யூரியா 902 மெட்ரிக் டன், டிஏபி 229 மெட்ரிக் டன், பொட்டாஷ் 233 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 743 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொட்டாஷ் உரவிலை உயா்வு காரணமாக உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வன உயிரின காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் இணை இயக்குநா் சா. பன்னீா்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...