ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வானத்தை ஓட்டி சென்றபோது நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இருசக்கர வானத்தை ஓட்டி சென்றபோது நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அடுத்த கெளுவத்தூா் மூலைக்கால்தெருவை சோ்ந்த சங்கா் ஆகாஸ்கா் மகன் ஜெயபிரகாஷ் (21). இவா் மன்னாா்குடியில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு ஜெயபிரகாஷ் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, தலையாமங்கலம் இரட்டை மதகடி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதால் தவறி விழுந்த ஜெயபிரகாஷ் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இது குறித்து, தலையாமங்கல் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.