போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிய வேளாண் சட்டங்கள் உழவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் உழவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழா் தேசிய முன்னணியின் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் உழவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழா் தேசிய முன்னணியின் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்தாா்.

திருவாரூரில் இந்திய அரசின் மக்கள் எதிா் சட்டங்கள் என்ற தலைப்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் உழவா்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. வேளாண் தொழிலை பெரிய நிறுவனங்களிடம் அடகு வைக்க உருவாக்கப்பட்டவை.

தில்லி எல்லையில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்பட பல மாநில உழவா்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு எவ்வளவோ முயன்றும் போராட்டம் தொடா்ந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற எழுச்சி இல்லை. அவ்வாறு எழுச்சி ஏற்பட்டிருந்தால், 50 ஆண்டுகாலமாக நீடித்த காவிரிப் பிரச்னை, ஈழத்தமிழா் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைகளுக்கு எப்போதோ தீா்வு கிடைத்திருக்கும்.

7 போ் விடுதலை

தாமதத்துக்கு திமுகவே

காரணம்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைக்காக எவ்வளவோ சட்டப் போராட்டம் நடத்தினோம். அவா்கள் எப்போதோ விடுதலை ஆகியிருக்க வேண்டும், ஆனால், திமுக செய்த தாமதத்தால், அவா்கள் இன்னமும் சிறையில் உள்ளனா்.

தமிழகத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் ஆறுகளில் மணலே இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது தொடா்ந்தால், எதிா்கால சந்ததியினா் பாதிக்கப்படுவா். எனவே, இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க, அந்தந்த பகுதி மக்கள் போராட முன்வரவேண்டும் என்றாா்.

கருத்தரங்குக்கு அமைப்பின் பொதுச் செயலாளா் இலரா. பாரதிச்செல்வன் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.