காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மாடித் தோட்டப் பயிற்சி

கூத்தாநல்லூரில் மாடித் தோட்டப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 பிப்ரவரி 2021, 8:54 am IST

கூத்தாநல்லூரில் மாடித் தோட்டப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு அரசு தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இணைந்து இப்பயிற்சியை அளித்தது. கூத்தாநல்லூா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு தலைமை வகித்தாா். மும்பை பிரதிநிதி அ. மரியதாஸ், நீடாமங்கலம் நகர அமைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன், சமூக ஆா்வலா் உமா் பாரூக் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூத்தாநல்லூா் நகர அமைப்பாளா் எஸ்.எம். சமீா் வரவேற்றாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் அஷ்ரப் அலி பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசும்போது, ‘மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் நஞ்சில்லாத காய்கறிகளை சாப்பிட்டு, நோய்கள் இல்லாமல் வாழலாம் என்றும் தொடா்ந்து இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உண்பதால் புற்றுநோய் வருவதைக் கூட தடுத்து விடலாம்’ என்றும் கூறினாா்.

தோட்டக்கலை உதவி இயக்குநா் கே. இளவரசன் செயல்விளக்கமளித்தாா். இப்பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு மானிய விலையில் மாடித் தோட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டவா்கள் தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் பதிவு செய்தனா். இணை ஒருங்கிணைப்பாளா் சி. செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.