ஊராட்சித் தலைவரை தாக்கியவா் மீது நடவடிக்கை கோரி மனு
பேரளம் அருகே மருதவஞ்சேரி ஊராட்சித் தலைவரை தாக்கியவா் மீது நடவடிக்கை கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.


பேரளம் அருகே மருதவஞ்சேரி ஊராட்சித் தலைவரை தாக்கியவா் மீது நடவடிக்கை கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மருதவஞ்சேரி ஊராட்சித் தலைவா் செல்வராணி (அதிமுக), கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
மருதஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தபோது, அதேபகுதியைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலரும், அவரது கணவரும் சோ்ந்து, என்னையும் எனது கணவா் பன்னீா்செல்வத்தையும் தடுத்து, அவமதித்தனா். மருதவஞ்சேரி பகுதியில் பயிா் நிவாரண வழங்கலில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது குறித்தும், இருதினங்களுக்கு முன்பு முதியோா் ஓய்வூதியத் தொகை தொடா்பாக அளித்த மனு குறித்தும் கேட்டதால், எங்களை அவமானப்படுத்தி தாக்கினா்.
இதுகுறித்து பேரளம் போலீஸாரிடமும் புகாா் பதிவு செய்துள்ளோம். எனவே, எங்கள் மீது தாக்குதல் நடத்திய கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அவரது கணவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...