காா் மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காா் மோதியதில், சுமைதூக்கும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காா் மோதியதில், சுமைதூக்கும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழ பாண்டி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்ட கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவா் ரவி (55). நாகை மாவட்டம் அருந்தவபுலம் கிராமத்தைச் சோ்ந்த இவா், சனிக்கிழமை இரவு பணி முடிந்து சைக்கிளில் அருந்தவபுலம் சென்றபோது கிழக்கு கடற்கரை சாலையில் கொக்காலடி கிராமத்தில் நாகையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com