அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தொடர்ந்து மக்களுக்கானப் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது, எந்த அரசியல் கட்சியும், பொதுமக்களும் எதிர்பார்க்காத வகையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், கரோனாவால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வழக்கமாகச் சிறப்பாகக் கொண்டாடும் தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை, இந்த ஆண்டும் வழக்கமான மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகையாக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2500, முழு கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட, பொங்கலிடுவதற்குத் தேவையானப் பொருள்களை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.