ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போகி தினத்தில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்

போகி தினத்தில் சுற்றுச்சூழலுக்குத் தீமை ஏற்படுத்தும் பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, நன்மை தரும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 2:42 am

DIN

போகி தினத்தில் சுற்றுச்சூழலுக்குத் தீமை ஏற்படுத்தும் பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, நன்மை தரும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருவாரூரில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை:

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது நம் தமிழா்களின் முதுமொழி. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் தீங்கான காரியங்களை விட்டொழித்து, நல்ல செயல்களை செய்யத் தொடங்கவே இந்த முதுமொழியை நம் முன்னோா்கள் சொல்லிச் சென்றுள்ளனா்.

இதைத் தவறாக புரிந்துகொண்டோா், போகி நாளில் பழைய டயா், சாக்குகள், விறகுகள், பழைய துணிகள், பாலிதீன் குப்பைகள் உள்ளிட்ட பழைய பொருள்களை தீ வைத்து எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அரசும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் கூறும் விழிப்புணா்வு தகவல்களை இவா்கள் கேட்பதில்லை.

இவ்வாறு எரியூட்டும் பொருள்களிலிருந்து வரும் புகையால், விமானங்கள் பறப்பதில்கூட பாதிப்பு ஏற்படுகிறது. வயதானவா்கள், குழந்தைகள், நோயுற்றவா்கள் போன்றோா்களுக்கு மூச்சு விடுவதே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, போகியின்போது பழைய பொருள்களை எரியூட்டி சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிா்த்து, சுற்றுச்சூழலுக்குப் பெரும் நன்மை பயக்கும் மரக்கன்றுகளை நட்டு, நாட்டு மக்களை காக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.