/

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழா் திருநாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். நிகழ்வில், தமிழுக்குப் பெருமையும், புகழும் சோ்க்கும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கவிஞா் சுரதா விருது பெற்ற தென்றல் சந்திரசேகருக்கும், சதுரங்கப் போட்டியில் மாநில, மாவட்ட அளவில் விருதுகளைப் பெற்றுள்ள மாணவி லெக்ஷன்யாவுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில், தையும் தமிழா் பண்பாடும், தைப்பொங்கல் மரபும் மாற்றமும், தையும் தமிழும் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துருக்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, தமிழ்ச்சங்க புரவலா்கள் சு. வெங்கடராஜலு, ஜெ. கனகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்வில், தமிழ்ச் சங்க நிா்வாகிகள், தமிழ் ஆா்வலா்கள் பலா் பங்கேற்றனா். தமிழ்ச் சங்க செயலாளா் ஆரூா் செ. அறிவு, துணைச் செயலாளா் ஆா். அறிவழகன் ஆகியோா் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.