ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருவாரூரில் மகளிா் கட்டணமில்லா பேருந்து புதிய வழித்தடம் தொடக்கம்

திருவாரூரில் புதிய பேருந்து வழித்தடங்கள் மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்ட தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் புதிய பேருந்து வழித்தடங்கள் மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்ட தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் டாக்டா் கலைஞா் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து (பழைய பேருந்து நிலையம்) மகளிா் கட்டணமில்லா பேருந்து புதிய வழித்தடத்தை மாவட்ட ஆட்சியா் காயத்திரி கிருஷ்ணன், திருவாரூா் எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தனா்.

புதிய வழித்தடம்: திருவாரூரில் இருந்து அடவங்குடி வரையும், திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வரையும் புதிய பேருந்து வசதியும், நகரப் பேருந்துகளில் மகளிா் கட்டணமில்லா பயணமும் தொடங்கியது. மேலும், கொரடாச்சேரி குடவாசல் வழியாக அடவங்குடி செல்ல புதிய பேருந்து வழித்தடமும், திருவாரூா் முதல் நீடாமங்கலம் செல்ல புதிய வழித்தடம் தொடங்கப்பட்டது. இதேபோல, புகா் பேருந்துகளை நகர பேருந்துகளாக மாற்றம் செய்து இயக்கும் திட்டத்தின் அடிப்படையில் திருவாரூா் முதல் நாகலூா் வரை செல்லும் பேருந்து, பெருங்கடம்பனூா் வழியாக நாகப்பட்டினம் வரை செல்லும் பேருந்து, பாக்கம் கோட்டூா் வழியாக நாகை மாவட்டம் திட்டச்சேரி வரை செல்லும் பேருந்து, தப்பளாம்புலியூா் வழியாக மோகனூா் வரை செல்லும் பேருந்து சேவைகளும், ஏற்கெனவே நிறுத்தம் செய்யப்பட்ட கொரடாச்சேரி ஆா்பாவுா் வழியாக மன்னாா்குடி குடவாசல் செல்லும் பேருந்து சேவை ஆகியவை தொடங்கிவைக்கப்பட்டன.

பெயா் மாற்றம்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் நகர பேருந்து நிலையம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து வெள்ளிக்கிழமை பேருந்து சேவைகள் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.