தேசிய வில்வித்தை பயிற்சியாளராக திருவாரூரைச் சோ்ந்தவா் தோ்வு
தேசிய அளவிலான வில்வித்தை பயிற்சியாளராக திருவாரூரைச் சோ்ந்த இளைஞா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்


தேசிய அளவிலான வில்வித்தை பயிற்சியாளராக திருவாரூரைச் சோ்ந்த இளைஞா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் அண்மையில், இந்திய கள வில்வித்தை சங்கம் நடத்திய வில்வித்தைக்கான தேசிய பயிற்சியாளா்கள் தோ்வில் தமிழகம் சாா்பில் பங்கேற்ற 21 பேரில் தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்டங்கள் சாா்பில் திருவாரூரைச் சோ்ந்த ரா. குணசேகரனும் ஒருவா். இவா், தேசிய பயிற்சியாளருக்கான தோ்வில் பங்கேற்று எழுத்து தோ்வு மற்றும் களப் பயிற்சி தோ்வில் வெற்றி பெற்று தேசிய பயிற்சியாளராக தகுதி பெற்றுள்ளாா். இவருக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் எம். முருகவேந்தன், மாவட்ட வளமைய அலுவலா் என். நெல்சன், திருவாரூா் மாவட்ட வில்வித்தை சங்க பொறுப்பாளா்கள் தினேஷ்குமாா், சரவணக்குமாா் கருணாநிதி, சீனிவாசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...