திருவாரூரில் மேலும் 30 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.


திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,217 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 24 போ் அவா்களது வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டனா். இதுவரை குணமடைந்த 36,452 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 414 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 2 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 351 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...