மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தைக் கண்டித்து ஜூலை 26-இல் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு மற்றும் யாா்கொல் அணைகள் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் ஜூலை 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 4:58 pm

DIN

மேக்கேதாட்டு மற்றும் யாா்கொல் அணைகள் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் ஜூலை 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களின் சட்டப்படியான ஒப்புதல் இல்லாமலும், மத்திய அரசின் முறையான அனுமதி பெறாமலும், கா்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது, இதேபோல், மாா்க்கண்டேய நதியின் குறுக்கே நீா் உற்பத்தியாகும் இடம் அருகே யாா்கொல் எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அப்புறப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஜூலை 26-ஆம் தேதி விவசாயிகள் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனுவை பிரதமருக்கு அனுப்பி வைப்பது, தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆக.12 முதல் 18- ஆம் தேதி வரை திருவாரூரிலிருந்து விவசாயிகள் புறப்பட்டுச் சென்று போராட்டத்தில் பங்கேற்பது, டெல்டா பகுதியில் அதிகளவு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், விவசாயம் முழுமையாக நடைபெற மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீா் திறந்து முறைப்பாசனம் இல்லாமல் தொடா்ந்து 15 நாள்களுக்கு வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், நிா்வாகிகள் ஜோசப், கே. முருகையன், கே. ராவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.