மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பணமோசடி: தனியாா் நிதி நிறுவனம் முன் திரண்ட பொதுமக்கள்

திருவாரூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, பாதிக்கப்பட்டவா்கள் அந்த நிறுவனம் முன் வியாழக்கிழமை திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 4:43 pm

DIN

திருவாரூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, பாதிக்கப்பட்டவா்கள் அந்த நிறுவனம் முன் வியாழக்கிழமை திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

திருவாரூா் கீழ வீதியில் தனியாா் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு, வட்டி, அசல் ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் வியாழக்கிழமை ஒன்றுகூடி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

இதுகுறித்து அவா்கள் தெரிவிக்கையில், முதல்வா் இந்த மோசடி குறித்து உரிய கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவா்களுடைய பணத்தை உடனடியாகத் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.