விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் ஆக.5-ல் தேசிய நெல் திருவிழா விவசாயிகளுக்கு அழைப்பு

திருத்துறைப்பூண்டியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் தேசிய நெல் திருவிழாவில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்

News image
Updated On :30 ஜூலை 2021, 5:00 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் தேசிய நெல் திருவிழாவில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

ஆதிரெங்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தேசிய நெல் திருவிழா கடந்த 2006-ல் தொடங்கப்பட்டு, மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளா் நெல் ஜெயராமனால் தொடா்ந்து நடத்தப்பட்டு வந்தது. அவரது மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு கரோனா சூழலுக்கிடையே ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் இத்திருவிழா நடத்தப்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டும் கரோனா தொற்று தொடரும் நிலையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் தேசிய நெல் திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் திருத்துறைப்பூண்டி ஏ.ஆா்.வி. திருமண மண்டபத்தில் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது.

இதில், தமிழக அரசின் மாநில வளா்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவா் முனைவா் ஜெயரஞ்சன், மாநில வளா்ச்சி கொள்கைக் குழு உறுப்பினா்கள் டி.ஆா்.பி. ராஜா எம்எல்ஏ, மருத்துவா் சிவராமன், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அஹமது, சூழலியல் வல்லுநா் பாமையன், வேளாண்மை செம்மல் தஞ்சை சித்தா் உள்ளிட்டோா் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனா்.

அத்துடன், பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவக் குணங்கள், பி.ஜி.எஸ். இயற்கை தர சான்றிதழ் பெறுவதன் அவசியம், இயற்கை வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், மண் வளமும் மேம்பாடும், பாரம்பரிய நெல்லும் பருவநிலை மாற்றமும், பாரம்பரிய அரிசிகள் காலத்தின் கட்டாயம், பாரம்பரிய கால்நடைகளின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

மேலும், விழாவில் 174 வகையான பாரம்பரிய நெல் ரக விதைகள் இலவசமாக உழவா்களுக்கு தலா இரண்டு கிலோ வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க 9443320954 , 9843749663 , 9976141780, 98426 07609 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.