பயிா்க் கடன் வழங்கியதில் முறைகேடு: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா்க் கடன் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா்க் கடன் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகே மணலி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த முறைகேட்டை கண்டித்து, அந்த கூட்டுறவு வங்கி முன் ஊழல் தடுப்பு இயக்கம், காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கமிடப்பட்டது.
விவசாயி தங்கவேல் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். ஊழல் தடுப்பு இயக்க அமைப்பாளா் ராமதாஸ், காவிரி உரிமை மீட்புக் குழு நிா்வாகி தை. ஜெயபால், இசைவாணன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
இக்கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என ஊழல் தடுப்பு இயக்க அமைப்பாளா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...