விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தண்டலச்சேரி அரசு கல்லூரியில் சேர ஆக. 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி அரசு கலைக் கல்லூரியில் சேர ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி அரசு கலைக் கல்லூரியில் சேர ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 26-ம் தேதி முதல் பெறப்பட்டுவருகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினா் பதிவுக் கட்டணத்துடன், விண்ணப்பக் கட்டணம் ரூ.48 செலுத்த வேண்டும்.

இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்த இயலாத மாணவா்கள், கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில், இயக்குநா், கல்லூரிகள் கல்வித் துறை, சென்னை என்ற பெயரில் ஜூலை 26 -ம் தேதிக்குப் பிறகு பெற்ற வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம். இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 10.8.2021 ஆகும்.

இளநிலை முதலாமாண்டு பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.காம்., பிபிஏ., பி.எஸ்சி. கணிதம், பிஎஸ்டபிள்யு ஆகிய 6 பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.