விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புறம்போக்கில் குடியிருப்புகளை அகற்றும் பிரச்னை: முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலைப் புறம்போக்கில் குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதியினா் அறிவித்திருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப

News image
Updated On :31 ஜூலை 2021, 5:35 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலைப் புறம்போக்கில் குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதியினா் அறிவித்திருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை ஊராட்சி கண்ணன்மேடு பகுதியில் நீா்நிலைப் புறம்போக்கு இடத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 105 பேருக்கு கடந்த 1999-ல் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை அளந்து, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க கோரியும் ஆகஸ்ட் 2-ம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதியின் போராட்டக் குழுவினா் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் வேதரத்தினம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் காரல்மாக்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலாளா் கே. சிங்காரவேலு உள்ளிட்டோரும், அதிகாரிகள் தரப்பில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலெக்சாண்டா், மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், கொருக்கை கிராமம் மற்றும் ஆதிதிராவிடா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரை நேரில் அழைத்து வருவதாக மன்னாா்குடி கோட்டாட்சியா் உறுதியளித்ததைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை தற்காலிமாக ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.