குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து இணையவழிப் போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகை, நாகூா் பகுதிகளில் இணையவழிப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகை, நாகூா் பகுதிகளில் இணையவழிப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளதைக் கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த இணையவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள் கையில் பதாகைகளை ஏந்தியப்படி மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அமைப்பின் மேலாண்மைக் குழு மாநிலத் தலைவா் எம். எஸ். சுலைமான், நாகை மாவட்டத் தலைவா் ஜெய்லாவூதீன் உள்ளிட்டோா் இணையவழியில் பங்கேற்றனா். இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேளாங்கண்ணி, கூத்தூா் ஆகிய ஊா்களிலும் இணையவழிப் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...