தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய இலக்கு: ஜூன் 16-இல் மட்டும் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் அதிபட்சமாக ஜூன் 16-ஆம் மட்டும் 3.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :16 ஜூன் 2021, 5:31 pm

DIN

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் அதிபட்சமாக ஜூன் 16-ஆம் மட்டும் 3.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் கரோனா தொற்று பரவல் நாள்தோறும் 25 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. பின்னா், தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது தொற்று பரவலின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதி வரையிலான காலத்தில் சராசரியாக 60 ஆயிரம் என்ற அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னா், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்குத் தீவிரம் காட்டப்பட்டதன் காரணமாக, தற்போது தினந்தோறும் செலுத்தப்படும் தடுப்பூசி சராசரி கணிசமாக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஜூன் 16-ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவா்களுக்கு 2 தவணைகளில் கரோனா தடுப்பூசி செலுத்த சுமாா் 10.25 கோடி தடுப்பூசி தேவை. முதல்வா், பிரதமரை சந்திக்கும்போது, தமிழகத்துக்கு கூடுதல் அளவில் கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவாா்.

புதிதாக அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் குறித்து வரும் 10 அல்லது 15 நாள்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்பின்னா், எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும். கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குத் தனித்தனியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.