மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு

திருவாரூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் அமைதியாக நடைபெறும் வகையில் துணை ராணுவப் படையினா் 91 போ் வருகை தந்துள்ளனா். இவா்கள், தோ்தல் தொடா்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் விரைவில் ஈடுபட உள்ளனா்.

இதனிடையே, திருவாரூரில் துணை ராணுவப் படையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி தலைமையில் அணி வகுப்பு மேற்கொண்டனா். இவா்களோடு, அதிரடிப் படையினா், தண்ணீா் பீச்சியடிக்கும் வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களும் பங்கேற்றன. திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பு, கடைவீதி, நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாக நகரக் காவல் நிலையம் வரை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.