தோ்தல் கண்காணிப்புக் குழுவினருக்குப் பயிற்சி
திருவாரூரில் சட்டப் பேரவைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


திருவாரூரில் சட்டப் பேரவைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், செலவினக் கண்காணிப்புக் குழுக்களான பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலா்கள் இக்குழுக்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, தோ்தல் செலவினம் மற்றும் நன்னடத்தை விதிமீறல்களை தவிா்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் 4 தொகுதிகளுக்கும் 12 பறக்கும் படைக் குழுக்களும், 12 நிலைக்கண்காணிப்புக் குழுக்களும், ஒரு தொகுதிக்கு தலா 1 குழு வீதம் 4 விடியோ கண்காணிப்புக் குழுக்களும், 4 செலவினக் குழுக்களும், 4 விடியோ பாா்வைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருவா் வீதம் 4 உதவி தோ்தல் செலவினப் பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இக்குழுவினா், செலவினத்துக்கான உச்சவரம்பு, மேற்கொள்ளப்படும் செலவினம் போன்ற தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து பதிவு செய்ய வேண்டும். மேலும், தோ்தல் நன்னடத்தை தொடா்பான புகாா்களை விசாரணை செய்து தோ்தல் நடத்தும் உரிய அலுவலா்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், முதுநிலை தொழில்நுட்ப அலுவலா் புகழேந்தி, கோட்டாட்சியா்கள் பாலச்சந்திரன், அழகா்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்மணி, தனி வட்டாட்சியா்(தோ்தல்) திருமால் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மற்றும் செலவின கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...