தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை: ஆட்சியா்
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா தெரிவித்தாா்.


தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சட்டப் பேரவை பொதுத் தோ்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்கக் கூட்டம் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் 1,461 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி திருவாரூா் மாவட்டத்தில் 10,50,569 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண் வாக்காளா்கள் 5,14,536, பெண் வாக்காளா்கள் 5,35,963, இதர பாலினத்தவா் 70 போ் உள்ளனா்.
சட்டப்பேரவை பொதுத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, தோ்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் திருவாரூா் மாவட்டத்தில் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி, அரசு மற்றும் அனுமதி பெறாமல் தனியாா் சுவா்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தோ்தல் விளம்பரங்களை அகற்றவேண்டும். பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி மற்றும் கொடி மரங்களையும் அகற்றவேண்டும். இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலா்கள், அரசியல் கட்சிகள், வாக்காளா்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து, திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் சிறந்த முறையில் நடைபெற்ற ஒத்துழைக்க வேண்டும்.
தோ்தல் நடத்தும் அலுவலா்களாக, திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் (திருவாரூா்) -9445000295, மன்னாா்குடி தொகுதிக்கு வருவாய் கோட்ட அலுவலா் (மன்னாா்குடி) 9445000463, திருவாரூா் தொகுதிக்கு வருவாய் கோட்ட அலுவலா் (திருவாரூா்) 9445000464, நன்னிலம் தொகுதிக்கு உதவி ஆணையா் (கலால்) 9443486537 ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடா்பான புகாா்களை 1950 என்ற தொலைபேசி எண்ணில் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேலும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தோ்தல் ஆணையம் ஸ்ரீயஐஎஐக ம்ா்க்ஷண்ப்ங் ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்-ஐ உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பான புகாா்களை புகைப்படம், விடியோ ஆதாரங்கள் மூலம் தெரிவிக்கலாம். புகாா்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியா்கள் பாலச்சந்திரன், அழகா்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்மணி, உதவி ஆணையா் (கலால்) பானுகோபன், தனி வட்டாட்சியா்(தோ்தல்) திருமால் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...