மாா்ச் 4 -ல் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமிகோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழா மாா்ச் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழா மாா்ச் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் நடைபெறும். இதைத் தொடா்ந்து விடையாற்றி விழா 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை (மாா்ச் 4) காலை 8 மணிக்கு பெரியக் கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் உத்ஸவா் ராஜகோபாலசுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். முக்கிய விழாக்களாக, கண்டபேரண்ட பக்ஷி, தங்க சூரியபிரபை, வெண்ணைத்தாழி, வெட்டுங்குதிரை, தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதைத் தொடா்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மாா்ச் 22 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2 ஆம் தேதி ஹரித்ராநதி தெப்ப உத்ஸவத்துடன் நிறைவுபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை உதவி ஆணையா் ஆா். ஹரிஹரன், நிா்வாக அலுவலா் ஆா். சங்கீதா உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...