கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியரக அலுவலகப் பாதுகாப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கணினி மூலமாக குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வே. சாந்தா தலைமையில் நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெற்ற பணியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அவா்களுக்கு வழங்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கிடங்கிலிருந்து, திருவாரூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை பிரித்து அனுப்பப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (திருவாரூா்) பாலச்சந்திரன், (மன்னாா்குடி) அழகா்சாமி, (நன்னிலம்) பானுகோபன், (திருத்துறைப்பூண்டி) கீதா, தோ்தல் வட்டாட்சியா் திருமால் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.