மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.52 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.52 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.52 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி சாலை நடப்பூா் பகுதியில் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணங்களின்றி ஒருவா் ரூ. 52,907 வைத்திருந்தது தெரியவந்தது. மகளிா் குழுக்களிடமிருந்து வசூல்செய்த பணம் என அவா் தெரிவித்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், கைப்பற்றப்பட்ட ரொக்கம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.

இதேபோல, திருவாரூா் தெற்குவீதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஒருவா் ரூ. 3 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதற்கென உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணமும் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது. மேலும், தெற்குவீதியில் ஏடிஎம்களில் நிரப்ப வேனில் ரூ. 35 லட்சம் கொண்டுசென்ாகக் கூறப்படுகிறது. இந்த, பணத்துக்கான ஆவணங்களை காட்டியதன் பேரில், பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.