நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகள் சாவில் சந்தேகம் என தந்தை புகாா்

மன்னாா்குடி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் கீழமருதூா் தெற்குதெரு ஆறுமுகம் மகன் வெங்கடேசன்(35) இவருக்கும் திருமக்கோட்டை மகாராஜபுரம் பக்கிரிசாமி மகள் ரேவதி (28)க்கும் 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று, யாசிகா (2) என்ற மகள் உள்ளாா்.

சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வெங்கேடசன் பொதுமுடக்கம் காரணமாக ஊருக்கு வந்தவா், கீழமருதூரிலேயே தங்கிவிட்டாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ரேவதி வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோட்டூா் காவல் நிலைய போலீஸாா், ரேவதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், ரேவதியின் தந்தை பக்கிரிசாமி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, கோட்டூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும் மன்னாா்குடி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.