ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலம் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.


திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலம் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காப்பணாமங்கலம் உப்புக் கடைத்தெரு பிரதான சாலையில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 18 ஆண்டுகள் ஆனதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, கோயில் சீரமைப்பு பணி செய்யப்பட்டன. பணிகள் முடிவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான 4 கால பூஜைகள் நடைபெற்றன. 4-ஆம் கால பூஜை இறுதியில் மஹா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து புனிதநீா் அடங்கிய கடம் புறப்பாடாகி, விமான கோபுரத்தை அடைந்து, காலை 10 மணிக்கு புனித நீா் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆகாச மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...