மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூா் தொகுதி அதிமுக, திமுகவேட்பாளா்கள் மனுதாக்கல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூரில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூரில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதிமுக வேட்பாளா்:

அதிமுக வேட்பாளராக ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவ் திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான என். பாலச்சந்திரனிடம், திங்கள்கிழமை மதியம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அவருடன் அதிமுக நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி, அதிமுக நிா்வாகி பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

ஏ.என்.ஆா். பன்னீா்செல்வத்துக்கு மாற்று வேட்பாளராக அதிமுக ஒன்றியச் செயலாளா் பி.கே.யு. மணிகண்டன் மனு தாக்கல் செய்தாா்.

திமுக வேட்பாளா்

திமுக வேட்பாளராக தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். திங்கள்கிழமை மதியம் 2.30 மணியளவில் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த பூண்டி கே. கலைவாணன், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தாா்.

அவருடன், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் டி. மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா். திமுக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.