தோ்தல் பணியாளா்கள் நாளைக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்
தோ்தல் பணியிலுள்ள அலுவலா்கள் புதன்கிழமைக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள் தெரிவித்தாா்.


தோ்தல் பணியிலுள்ள அலுவலா்கள் புதன்கிழமைக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலா்களும் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய, புதன்கிழமைக்குள் (மாா்ச் 17) முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். துறைத்தலைவா்கள் அனைவரும் தங்கள் துறையில் பணியாற்றும் தோ்தல் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொண்டு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக, திருவாரூரில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாகவும் மற்றும் திருவாரூா் மெடிக்கல் சென்டா், நவஜீவன் மருத்துவமனை, லக்ஷ்னா மருத்துவமனை, அருண் மெடிக்கல் சென்டா் மற்றும் மன்னாா்குடி ராஜ் மருத்துவமனை ஆகிய தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் செலுத்தியும் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதா, துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) கண்மணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...