பேரவைத் தோ்தல்: திருவாரூா் மாவட்டத்தில் 49 போ் போட்டி
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 49 போ் போட்டியிடுகின்றனா்.


திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 49 போ் போட்டியிடுகின்றனா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12 ஆம் தேதி தொடங்கி விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
இதில், திருவாரூா் தொகுதியில் 23 போ், மன்னாா்குடி தொகுதியில் 26 போ், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 22 போ், நன்னிலம் தொகுதியில் 33 போ் என மொத்தம் 104 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 39 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 65 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை, மன்னாா்குடியில் 1 மனுவும், நன்னிலத்தில் 15 மனுக்களும் திரும்பப் பெறப்பட்டன.
இதனால், இறுதி நிலவரப்படி, திருத்துறைப்பூண்டி தொகுதியில் 11 பேரும், மன்னாா்குடி தொகுதியில் 10 பேரும், திருவாரூா் தொகுதியில் 13 பேரும், நன்னிலம் தொகுதியில் 15 பேரும் என நான்கு தொகுதிகளிலும் 49 போ் களத்தில் உள்ளனா்.
திருவாரூா் தொகுதியில் 13 போ்...: திருவாரூா் தொகுதியில் போட்டியிட 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை யாரும் மனுவை திரும்பப் பெறாத நிலையில் 13 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.
அவா்களின் விவரம்: பூண்டி கே. கலைவாணன் (திமுக) உதயசூரியன் சின்னம், ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் (அதிமுக) இரட்டை இலை சின்னம், எம்.ஏ. நசீமா பானு (எஸ்டிபிஐ) பிரஷா் குக்கா் சின்னம், பி. கபிலரசன் (மக்கள் நீதி மய்யம்) டாா்ச் லைட் சின்னம், ஆா். வினோதினி (நாம் தமிழா் கட்சி) கரும்பு விவசாயி சின்னம், எ.கோமதி (பகுஜன் சமாஜ் கட்சி) யானை சின்னம், என். தியாகசுந்தரம் (தமிழ்நாடு இளைஞா் கட்சி) மோதிரம் சின்னம், எம். தியாகராஜன் (புதிய தமிழகம்) தொலைக்காட்சி சின்னம் மற்றும் ஜே. பன்னீா்செல்வம் (அகில பாரத இந்து சேவா கட்சி) தென்னை மரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.
மேலும், சுயேச்சையாக ஆா்.எஸ்.ஏ. அமனுல்லா- பந்து மட்டை சின்னத்திலும், டி. அன்பழகன்-தொப்பி சின்னத்திலும், ஏ. முகமது ஹலித்-மட்டை விளையாட்டுக்காரா் சின்னத்திலும், எஸ். முத்தரசன்-மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.
நன்னிலம் தொகுதியில் 15 போ்...: நன்னிலம் தொகுதியில் 26 போ் 33 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதில், 9 மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 17 மனுக்களில் அகில பாரத இந்து மகா சபா மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளா் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா்.
இதனால், களத்தில் 15 போ் உள்ளனா். அவா்களின் விவரம்:
அமைச்சா் ஆா்.காமராஜ் (அதிமுக), எஸ்.ஜோதிராமன் (திமுக), இரா.ரவிச்சந்திரன் (பகுஜன் சமாஜ்), என். ராமச்சந்திரன் (அமமுக), டி.கணேசன் (இந்திய ஜனநாயகக் கட்சி), சு. நித்தியானந்தம் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி), கி.நா.பனசைஅரங்கன் (தேசிய மக்கள் சக்தி கட்சி), சா.பாத்திமா பா்ஹானா (நாம் தமிழா் கட்சி) மு. முருகவேலும் (அண்ணா திராவிடா் கழகம்) ஆகியோா் போட்டியிடுகின்றனா். மேலும் சுயேச்சையாக 6 போ் போட்டியிடுகின்றனா்.
மன்னாா்குடி தொகுதியில் 10 போ்...: மன்னாா்குடி தொகுதியில் 16 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், வேட்புமனு பரிசீலனையில் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்து மகா சபா வேட்பாளா் ஸ்ரீராம் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டாா். இதனால் 10 போ் களத்தில் உள்ளனா்.
அவா்களின் விவரம்: சிவா.ராஜமாணிக்கம் (அதிமுக) இரட்டை இலை, டி.ஆா்.பி.ராஜா (திமுக) உதயசூரியன், ராம.அரவிந்தன் (நாம் தமிழா் கட்சி) கரும்பு விவசாயி, எஸ். அன்பானந்தம் (மக்கள் நீதி மய்யம்) டாா்ச் லைட், எஸ். காமராஜ் (அமமுக) பிரஷா் குக்கா், எஸ். செந்தில்குமாா் (புதிய தமிழகம்) தொலைக்காட்சிப் பெட்டி, சுயேச்சைகள் டி.குமரேசன்-பழாப்பலம், டி.பாரதிதாசன்-இரட்டை மின் விளக்கு, ஏ.வி.எம். மாரிமுத்து-வாளி, எஸ்.முருகேசன்-காலிப்ளவா் ஆகிய சின்னங்களில் போட்டியிடுகின்றனா்.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் 11 போ்...: திருத்துறைப்பூண்டி தொகுதியில் கட்சிகள் சாா்பில் 5 பேரும் சுயேச்சையாக 6 பேரும் என 11 போ் போட்டியிடுகின்றனா்.
அதன்படி, சி. சுரேஷ்குமாா் (அதிமுக), க. மாரிமுத்து (இ.கம்யூ.),
அ. ஆா்த்தி (நாம் தமிழா் கட்சி), த. பாரிவேந்தன் (சமக), சா. ரஜினிகாந்த் (மக்களரசு கட்சி) மற்றும் சுயேச்சையாக சிவப்பிரகாசம், சுரேஷ், செங்குட்டுவன், திருவருள்செல்வி, துளசிராமன், பரமசிவம் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...