நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

100 நாள் திட்ட பணியாளா்களிடம்இந்திய கம்யூ. வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மன்னாா்குடி அருகே 100 நாள் திட்ட பணியாளா்களிடம் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே 100 நாள் திட்ட பணியாளா்களிடம் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

இவா், கோட்டூா் வழியாக பிரசார வாகனத்தில் சென்றபோது, சாலை ஓரங்களில் தேசிய ஊரக நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்கள் வேலை செய்துகொண்டிருந்தனா். அவா்களை பாா்த்ததும், வாகனத்திலிருந்து இறங்கிய வேட்பாளா் மாரிமுத்து, தனக்கு கதிா் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.

தான்வெற்றி பெற்றால், நூறு நாள் வேலைத்திட்டத்தின் வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரிக்கவும், தினக்கூலியை ரூ.450 ஆக உயா்த்தவும் சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.