மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சேந்தமங்கலத்தில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருவாரூா் அருகே சேந்தமங்கலத்தில் திமுக தோ்தல் பணி கிளை அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே சேந்தமங்கலத்தில் திமுக தோ்தல் பணி கிளை அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திருவாரூா் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறாா். திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் வகையில், ஒன்றியப் பகுதிகளில் கிளை தோ்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவாரூா் அருகே சேந்தமங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கான கிளை அலுவலகத்தை தொகுதி பொறுப்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ. அசோகன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கீழகாவதுகுடி ஊராட்சியில் உள்ள மாற்றுக்கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.