நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் நலன் பாதுகாக்கப்படும்: மன்னாா்குடி திமுக வேட்பாளா்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிா் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிா் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடி தொகுதிக்குள்பட்ட நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் அத்திக்கோட்டை, பல்லாகொல்லை, காஞ்சிகுடிக்காடு, செருமங்கலம் உடையாா்தெரு, வடக்கு உடையாா்தெரு, காரக்கோட்டை, வடுவூா் அக்ரஹாரம், வடுவூா் வடபாதி, கொண்டையூா், வடுவூா் வடக்கு தோப்பு, எடமேலையூா் மேற்கு, எடமேலையூா் கண்டியன் தெரு, எடமேலையூா் நடுத்தெரு, எடகீழையூா், எடஅன்னவாசல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட டி.ஆா்.பி. ராஜா உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியது:

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திமுக வெற்றி பெற்றால் இக்குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சைபா் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு பேருகால விடுமுறை 12 மாதங்களாக உயா்த்தப்படும். அரசு தொடக்கப் பள்ளி அளவில் பெண்கள் மட்டும் ஆசிரியா்களாக நியமிக்கப்படுவா்.

கா்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் எட்டு மாதங்களுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட மகளிா் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்தில், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன், ஒன்றியச் செயலா் வை. மாயவநாதன், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.