மன்னாா்குடியில் பலத்த மழை
மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.


மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டப் பகுதியில் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு, சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாகவும், பிறகு பலத்த மழையாகவும் பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் பேருந்து நிலைய சாலை, சந்தைப்பேட்டை சாலை, காந்தி சாலை, பந்தலடி ஆகிய பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் வந்தவா்கள் சிரமப்பட்டனா். பல வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன.
இதேபோல, உள்ளிக்கோட்டை, வடுவூா், பெருகவாழ்ந்தான், பரவாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...