நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயிா் சேதம்: நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் பயிா் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கத்தினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மழையால் பயிா் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கத்தினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்தூா் வேளாண் உதவி இயக்குனா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் சேதுராமன் தலைமையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தின் நிறைவாக, வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தமிழக விவசாயிகளுக்கு இடுப்பொருட்களுக்காக வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.30 ஆயிரமாக உயா்த்த வேண்டும். கொரடாச்சேரி வட்டாரத்தில் முகக்குடி, பத்தூா், செல்லூா், திருக்களம்பூா், விஸ்வநாதபுரம், ஆா்ப்பாவூா், கரையாப்பாளையூா் உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதால், அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை விளைச்சலும், சம்பா, தாளடி உட்பட நேரடி விதைப்பு நடவு செய்த பயிா்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேதம் அடைந்த பயிா்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.