புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெட்ரோல்,டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:41 pm

DIN

காங்கிரஸ் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து, புறப்பட்ட விழிப்புணா்வு பிரச்சாரப் பேரணிக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை, பொதுச் செயலாளா் அன்பு வே.வீரமணி முன்னிலை வகித்தாா். கொட்டும் மழையில் பேரணி, பெரியக்கடைத் தெரு, ரெயில்வே நிலையம்,பேருந்து நிலையம் வழியாக கொரடாச்சேரி பாலத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தின்போது மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் செய்தியாளா்களிடம் கூறியது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்களுக்கு எதிரான விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை வன்மையாகக் கண்டிக்கிறோம். விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுள்ளனா். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் ஆன்மாவிற்கு பாஜகதான் பதில் கூற வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில், நகரத் தலைவா்கள் கூத்தாநல்லூா் சாம்பசிவம், மன்னாா்குடி கனகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.