மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கூத்தாநல்லூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி, ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கொரடாச்சேரியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
கூத்தாநல்லூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி, ஆர்ப்பாட்டம்
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கொரடாச்சேரியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில், மாவட்டப் பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியினர், விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணியாகப் புறப்பட்டனர்.

பாலத்தை அடைந்து, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன் பத்திரிகையாளர்களிடம் கூறியது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளைத் தான் செய்து வருகிறார்கள். அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை உள்ளிட்ட விலை உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

Story image

பாஜகவுக்கு பயம் வந்து விட்டதால், வேளாண் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உயிரிழப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், நகரத் தலைவர்கள் கூத்தாநல்லூர் சாம்பசிவம், மன்னார்குடி கனகவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கொட்டும் மழையிலும்  பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.