ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முத்துப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துச் சேவை தொடக்கம்

முத்துப்பேட்டைபகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முத்துப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கான புதிய வழித்தடத்தில் பேருந்தை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி

News image
முத்துப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு புதிய வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் .
Updated On :16 அக்டோபர் 2021, 8:07 am

DIN

முத்துப்பேட்டைபகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முத்துப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கான புதிய வழித்தடத்தில் பேருந்தை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே எஸ் விஜயன் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை உதயமார்த்தாண்டபுரம் இடும்பாவனம் சித்தமல்லி பெருகவாழ்ந்தான் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் இளைஞர்களும் மாணவர்களும் கோவை திருப்பூர் பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சாயப் பட்டறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும் என்பது என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியை கே எஸ் விஜயன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்பு கொண்டு இந்த வழியை கோயம்புத்தூருக்கு முத்துப்பேட்டையிலிருந்து புதிய வழித்தடத்தை துவக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை முத்துப்பேட்டை சித்தமல்லி மன்னார்குடி தஞ்சை திருச்சி வழியாகவும் புதிய வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்து காலை 9.50 மணிக்கு முத்துப்பேட்டையில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். கோயம்புத்தூரில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு முத்துப்பேட்டை வந்தடையும்.

இந்நிகழ்வில் அரசுப் போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் மகேந்திர குமார் வணிக மேலாளர் எஸ் ராஜா திருத்துறைப்பூண்டி கிளை மேலாளர் நடராஜ் மற்றும் ஒன்றிய தி.மு.கசெயலாளர்கள் செயலாளர் இரா.மனோகரன்(முத்துப்பேட்டை ) வி.எஸ்.ஆர்.தேவதாஸ், பால.ஞானவேல் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், முத்துப்பேட்டை பேரூர் கழக பொறுப்பாளர் நவாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.