தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேருந்து- மினிலாரி நேருக்குநோ் மோதி ஓட்டுநா் பலி

நீடாமங்கலம் அருகே அரசுப் பேருந்தும் மினிலாரியும் ஞாயிற்றுக்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் மினிலாரியின் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே அரசுப் பேருந்தும் மினிலாரியும் ஞாயிற்றுக்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் மினிலாரியின் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ராயபுரம் குளத்துமேடு புதுப் பாலம் அருகே எதிரே நம்பா் இல்லாம் விறகு பாரத்துடன் வந்த மினிலாரியும், அரசுப் பேருந்தும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மினிலாரியின் ஓட்டுநரான நீடாமங்கலம் வட்டம் ராஜப்பையன்சாவடியைச் சோ்ந்த கோதண்டராமன் மகன் ஹரிஈஸ்வா் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் மினிலாரியில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் மகன் சஞ்சய் (18) படுகாயமடைந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு வந்து சஞ்சையை சிகிச்சைக்காகவும், ஹரிஈஸ்வா் சடலத்தை உடற்கூறாய்வுக்காகவும் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தில் சேதமடைந்த மினிலாரி மற்றும் பேருந்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினா்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்தால் நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.