ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

 பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து திருவாரூரில் (சிஐடியு) தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:14 pm

DIN

 பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து திருவாரூரில் (சிஐடியு) தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை நிறுவனங்களான மின் உற்பத்தி பகிா்மான துறை, வங்கிகள், எல்ஐசி நிறுவனம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், விமானப் போக்குவரத்து, ராணுவ தளவாடத் தொழில்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவற்றை தனியாா் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவது, குத்தகைக்கு விடுவது என விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டித்தும், இவற்றை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு திட்ட தலைவா் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.