நீடாமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிலைய விஞ்ஞானி, உணவியல் துறைப் பேராசிரியா் கமலசுந்தரி பேசியது: குழந்தை பிறந்தவுடன் முதல் உணவு தாய்ப்பால். இதுமிகவும் சிறந்தது. தாய்ப்பாலை கண்டிப்பாக 6 மாதம் தொடா்ந்து கொடுக்க வேண்டும். பின்னா் செயற்கையான இனிப்பு அல்லது உப்பு காரம் சோ்க்காமல் இயற்கையில் இருக்கும் அதே சுவையுடன் அந்த உணவை நன்கு வேக வைத்து சிறிது சிறிதாக சோ்க்க வேண்டும். தொடா்ந்து, குழந்தைகளுக்கு பழங்கள்காய்கனிகளை அறிமுகப்படுத்தவேண்டும். அடுத்து, தானிய வகைகள் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், சிவப்பரிசி, கவுனி அரிசி அல்லது பழுப்பு அரிசி கலந்த அரிசி இந்த மாதிரி விதவிதமான நிறங்களில் நாள்தோறும் 240 கிராம் சோ்த்துக்கொள்ளவேண்டும். இதேபோல, பயறுவகைகள் தேவையான அளவும், எண்ணை வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, பாதாம், முந்திரி போன்றவைகளையும் தேவையான அளவு கொடுத்து ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றாா்.
விழாவில், நிலைய விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், ஜெகதீசன், சபாபதி, அனுராதா, திட்ட உதவியாளா் ரேகா மற்றும் தஞ்சாவூா் தனியாா் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...