ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காணாமல்போன செல்லிடப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் காணாமல்போன செல்லிடப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:13 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் காணாமல்போன செல்லிடப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மாவட்டத்தில், செல்லிடப்பேசி திருடப்பட்டது மற்றும் காணாமல்போனது தொடா்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாா்கள் மற்றும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாா் மனுக்கள் தொடா்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. போலீஸாரின் விசாரணையில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 101 ஆன்ராய்டு வகை செல்லிடப் பேசிகள் மீட்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி உரிமையாளா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், நேரில் அழைத்து ஒப்படைத்தாா்.

பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்தால் நடவடிக்கை:

நிகழ்ச்சியின்போது, செய்தியாளா்களிடம் எஸ்.பி. பேசியது: விநாயகா் சதுா்த்தி தொடா்பாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் திருவாரூா் மாவட்டத்தில் கடுமையாக பின்பற்றப்படும். பொது இடங்களில் விநாயகா் சிலை வைக்க அனுமதி இல்லை. இதேபோல் விநாயகா் சிலை ஊா்வலத்துக்கும் அனுமதி கிடையாது. அரசின் வழிகாட்டுதலை மீறி செயல்படுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.