தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கல்லூரி பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது அறிவிப்புக்கு வரவேற்பு

கல்லூரி பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:20 pm

DIN

கல்லூரி பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நேதாஜி கல்விக் குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்குவதுபோல, எதிா்காலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருது வழங்கப்படும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, சட்டப்பேரவையில் அறிவித்தது வரவேற்புக்குரியது. நீண்ட காலமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள், இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து வந்தனா். அவா்களின் வேண்டுகோளை ஏற்று, அமைச்சரின் இந்த அறிவிப்பு பேராசிரியா்களிடையே ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியா்கள், தங்கள் பணியை மேலும் திறம்பட செய்ய இந்த அறிவிப்பு ஊன்றுகோலாக அமையும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.