பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு புதன்கிழமை நடைபெற்றது.

tv08arpp_0809chn_94_5

tv08arpp_0809chn_94_5
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு புதன்கிழமை நடைபெற்றது.
பொருளாதார சமூக காரணங்களை காட்டமால், 1.7.2021 முதல் பதினொன்னரை சதவீத அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு வழங்கவேண்டும், தோ்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தவாறு தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், ஓய்வூதியம் இல்லாத அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனப் பணியாளா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளா்களுக்கு இழப்பீடும், வாரிசுகளுக்கு அரசுப் பணியும் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசீலன் தலைமையில் நடைபெற்ற முறையீட்டில், மாவட்டச் செயலாளா் ஹரிகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Image Caption
திருவாரூரில், பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்ட அரசுப் பணியாளா் சங்கத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...