ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

உள்ளாட்சித் தோ்தல்: கட்டுப்பாட்டு அறை அமைப்பு

திருவாரூா் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலையொட்டி, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலையொட்டி, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 2019 சாதாரண ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களில், தோ்தல் நடைபெறாத மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பதவியிடங்களில் வேட்பாளா் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்ளால் 30.06.2021 வரை 32 காலிப்பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக அக்டோபா் 9-ஆம் தேதி நடத்த, தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தோ்தல்கள் தொடா்பாக பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்க ஏதுவாக, மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் ஆட்சேபனைகளை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04366-226661 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 425 9462 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.